10 ம் வகுப்பு பொதுத் தேர்வு:
நாளை அறிவியல் பாடத்திற்கான தேர்வு :
தேர்வு எழுத ஆர்வம் காட்டும் தூத்துக்குடி எஸ்.ஏ.வி.மேல்நிலைப் பள்ளி மாணவர்கள்
தமிழகமெங்கும் 10 ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 11 ம் தேதி புதன்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.11 ம் தேதி புதன்கிழமை முதல் தேர்வாக மொழிப்பாடமான தமிழ் மற்றும் பிற மொழிப் பாடத்திற்கான தேர்வு நடைபெற்றது.
அடுத்து 16 – 03 – 2026 திங்கட்கிழமை ஆங்கிலம் பாடத்திற்கான தேர்வு நடைபெற்றது .

25 – 03 – 2026 புதன்கிழமை கணிதம் ( கணிதவியல்) பாடத்திற்கான தேர்வு நடைபெற்றது.
நாளை 30-03-2026 – 4 வது தேர்வாக அறிவியல் பாடத்திற்கான தேர்வு நடைபெற இருக்கிறது.
இந்நிலையில் தூத்துக்குடி எஸ்.ஏ.வி.மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 4 நாட்களுக்கு முன்பே தேர்வு எழுத தயாராகி விட்டனர்.
தேர்விற்கு மாணவர்களை ஆசிரியர்கள் தயார் படுத்தி இருப்பதை மாணவர்கள் இருக்கும் உற்சாகத்தில் இருந்தே காண முடிகிறது.
அதுவும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் தேர்விற்கு தயாராக இருப்பது அவர்கள் தங்களது பள்ளிக்கு தேர்வில் மிகச் சிறந்த தேர்ச்சியினை வழங்க இருப்பதையே பறை சாற்றுகிறது.
எஸ்.ஏ.வி.பள்ளி மாணவர்கள் அழகாக பள்ளிச் சீருடையில் சீராக வந்து தங்களது தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளில் ( Coaching Class) ஆர்வமாக கலந்து கொள்வது அவர்களது பெற்றோர்கள்,தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் சிறந்த வழி காட்டுதலை நிச்சயப் படுத்துகிறது.
மாணவர்களின் ஒழுக்கம் மற்றும் ஆர்வத்தை பார்க்கும் போது இந்த ஆண்டு 10 ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவர்கள் கடந்த ஆண்டை விட இந்த கல்வியாண்டில் மிகச் சிறந்த தேர்ச்சி விகிதத்தை வழங்குவார்கள் என்பது தெள்ளத் தெளிவாகிறது என்பது உண்மை.
நாளை அறிவியல் தேர்வு எழுத இருக்கும் தூத்துக்குடி எஸ்.ஏ.வி.மேல்நிலப் பள்ளி 10 வகுப்பு மாணவர்கள் அனைவரும் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற கல்விச் செய்திகள் வாழ்த்துகிறது…🌹🌹🌹🙏🙏🙏
ஆசிரியர்
“கல்விச் செய்திகள் “












