தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 45 வது பட்டமளிப்பு விழா : நீதியரசர் ஜகதீஷ் சந்திரா 695 மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 45 வது பட்டமளிப்பு விழா
நீதியரசர் ஜகதீஷ் சந்திரா 695 மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 28.03.2026 நேற்று 45 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் ஜகதீஸ் சந்திரா பங்கேற்று 695 மாணவியருக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.

உரையில் தூத்துக்குடியில் பெண்களுக்காக முதன் முதல் துவங்கப்பட்ட தூய மரியன்னை கல்லூரியின் சிறப்பை எடுத்துக்கூறி, பட்டங்கள் பெறவிருக்கும் மாணவியர் கல்வி கற்றதன் பெருமையை உணர்ந்து தன்னம்பிக்கையோடு வாழ வேண்டும். பெண்கள் நிர்வாகம், சட்டம், மருத்துவம் போன்ற பல்வேறு துறைகளில் சாதிக்கப் பிறந்தவர்கள் என்பதால், சாதனையாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள பெண்களை மாதிரியாக வைத்து சவால்களை எதிர்கொண்டுசெயல்படவேண்டும் என்று கூறி மாணவியரை ஊக்கப்படுத்தினார்.

விழாவில் கல்லூரி முதல்வர் அருட்சகோதரி. முனைவர். ஜெஸி பெர்னாண்டோ தலைமை ஏற்று ஆண்டறிக்கை வழங்கினார். தேர்வுக் கட்டுப்பாட்டு ஆணையர் அருட்சகோதரி ரீத்தா விழாவினைத் துவக்கி வைத்தார்.

விழாவில் துணை முதல்வர்கள், அனைத்துத் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவடைந்தது.