தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின் ஜீன் 4 ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் : 48 நாட்கள் கோடை விமுறை

தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின் ஜீன் 4 ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் :
48 நாட்கள் கோடை விமுறை

தமிழகத்தில் தொடக்கப் பள்ளிகளுக்கு 1 ம் வகுப்பு முதல் 3 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஏப்ரல் மாதம் 8 ம் தேதி புதன்கிழமை முழு ஆண்டு தேர்வுகள் தொடங்கி ஏப்ரல் மாதம் 16 ஆம் தேதி வியாழக்கிழமை முடிவடைகிறது .

மேலும் 4 ம் வகுப்பு முதல் 9 ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் ஏப்ரல் மாதம் 6 ம் தேதி திங்கள் கிழமை தொடங்கி 16ஆம் தேதி வியாழக்கிழமை முடிவடைகிறது.

இந்நிலையில் ஏப்ரல் 17 ஆம் தேதி முதல் மே மாதம் 31ஆம் தேதி வரை 45 நாட்கள் முழு ஆண்டு தேர்வு கோடை விடுமுறை விடப்படும் என்றும், அதன் பிறகு 2026 – 2027 ம் கல்வி ஆண்டுக்கான பள்ளி வேலை நாள் ஜீன் 1 ம் தேதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது ஜூன் மாதம் 4 ம் தேதி வியாழக்கிழமை பள்ளிகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் மாணவர்களுக்கு 48 நாட்கள் கோடை விடுமுறை விடப்படுவதால் மாணவர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

தேர்தல் மற்றும் கோடை வெயில் தாக்கமே விடுமுறை நாட்கள் அதிகமாக காரணம் ஆகும்