தூத்துக்குடி தஸ்நேவிஸ் மாதா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் தினம்

தூத்துக்குடி தஸ்நேவிஸ் மாதா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் தினம்

தூத்துக்குடி தஸ்நேவிஸ் மாதா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் தினமான உலக வன நாள் ,உலக தண்ணீர் தினம் மற்றும் உலக மகளிர் தினமானது தலைமை ஆசிரியர் அருட் சகோதரி ஜெயந்தி தலைமையில் நடைபெற்றது.

11 ம் வகுப்பு மாணவிகள் நூறு விதைப் பந்துகளை உதவி தலைமை ஆசிரியர் அருட்சகோதரி கிறிஸ்டி முன்னிலையில் தலைமை ஆசிரியரிடம் வழங்கினார்கள். பத்தாம் வகுப்பு மாணவிகளும் பல்வேறு விதைகளை பள்ளி வளாகத் தோட்டத்தில் விதைத்தனர். மேலும் பத்தாம் வகுப்பு மாணவிகள் பிறந்தநாள் பரிசாக பள்ளி நூலகத்திற்கு புத்தகங்களை வழங்கினார்கள்.

மாணவிகள் அருள் நிஷா, ஆக்னேஸ் வினோலியா,ரெனோசா,பாலா இசக்கி ஆகியோர் சொற்பொழிவு ஆற்றினார்கள். தலைமையாசிரியர் சொற்பொழிவாற்றிய மாணவியர்களுக்குபரிசுகளை வழங்கினார்.

இவ்வாண்டு பசுமை படை மாணவிகள் பல்வேறு வாழை மரக்கன்றுகளை வளர்த்தனர். தலைமையாசிரியர் விழாவில் பங்கேற்ற அனைத்து மாணவிகள் மற்றும் பசுமைப்படை ஆசிரியர் சகாய ஆனந்தி விண்ணரசி ஆகியோர்களை பாராட்டினார்.