நெல்லை எப்.எக்ஸ். சிபிஎஸ்இ ( F.X. CBSE) பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா!

நெல்லை எப்.எக்ஸ். சிபிஎஸ்இ ( F.X. CBSE) பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா!

நெல்லை வண்ணார்பேட்டை எப்.எக்ஸ். சிபிஎஸ்இ பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் ஸ்காட் குழும நிறுவனர் கிளிட்டஸ் பாபு பங்கேற்று சிறப்பித்தார்.

திருநெல்வேலி பிரான்சிஸ் சேவியர் பள்ளியின் மழலையர் மாணவர்களின் கேஜி கிராஜூயேஷன் விழா நடைபெற்றது. இவ்விழாவில் பள்ளி நிறுவனர் முனைவர். கிளிட்டஸ் பாபு தலைமை தாங்கினார்.

பொதுமேலாளர் கிருஷ்ணகுமார் மற்றும் பள்ளி முதல்வர் முனைவர். ஹரிஹரசுதன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மேலும், மெய்ஞானபுரம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரியும் முன்னாள் மாணவியுமான டாக்டர்.ஷைன்லி தலைமை விருந்தினராக கலந்து கொண்டு, தனது பள்ளி நினைவுகளை பகிர்ந்து கொண்டு, குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்காக பெற்றோர் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் நன்கு கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

இந்த நிகழ்வில் பொதுமேலாளர் . கிருஷ்ணகுமார் பேசுகையில், பிரான்சிஸ் சேவியர் பள்ளியில் ஒரு பெற்றோராக பெற்ற அனுபவங்களை பகிர்ந்து கொண்டு, பள்ளி குழந்தைகளின் வளர்ச்சிக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை பாராட்டினார்.

சிறுவர்கள் அனைவரும் பட்டமளிப்பு விழா உடையணிந்து பெருமிதத்துடன் அணிவகுத்து அரங்கிற்கு வந்தனர். அவர்களுக்கு நிறுவனர் கிளிட்டஸ் பாபு, தலைமை விருந்தினர் ஷைன்லி பட்டமளிப்பு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர். பின்னர் மழலையரின் நடனங்கள் அனைவரையும் கவர்ந்தன.

மாணவர்கள் கேஜி கல்வியின் பள்ளி வாழ்க்கை அனுபவங்கள் குறித்து பேசினர். வரவேற்புரை, நன்றி உரை ஆகியவற்றை தொகுத்து வழங்கினர்.

இந்நிகழ்வில் முக்கியமாக மழலையர்கள் தங்களின் பட்டமளிப்பு சான்றிதழ்களை பெற்றுக்கொண்டு பட்டமளிப்பு பாடல் பாடிய தருணம் மிகவும் பெற்றோர்களுக்கு உணர்ச்சிகரமானதாக இருந்தது.

இந்நிகழ்ச்சி மழலையரின் பெற்றோரின் மனதில் பெருமை, மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.