இன்று 10 ம் வகுப்பு பொதுத் தேர்வு:
ஆங்கிலம் பாடத்திற்கான தேர்வு நடைபெற இருக்கிறது
தமிழகமெங்கும் 10 ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 11 ம் தேதி புதன்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.11 ம் தேதி புதன்கிழமை முதல் தேர்வாக மொழிப்பாடமான தமிழ் பாடத் தேர்வு நடைபெற்றது.
இன்று 16 – 03 – 2026 திங்கட்கிழமை ஆங்கிலம் பாடத்திற்கான தேர்வு நடைபெற இருக்கிறது.காலை 09.45 மணிக்கு தேர்வுக்கான கேள்வித் தாள்கள் கட்டுகள் மாணவர்கள் முன்னிலையில் பிரிக்கப்பட்டு தேர்வு எழுத மாணவர்களுக்கு வழங்கப்படும். தேர்வு காலை 9.50 மணிக்கு ஆரம்பமாகி மதியம் 1.15 வரை நடைபெறும்.
ஆங்கில வழியில் கல்வி கற்கும் மாணவ, மாணவிகளுக்கு எளிதாக இருக்கும் ஆங்கில தேர்வு , தமிழ் வழியில் கற்கும் மாணவ, மாணவிகளுக்கு சிறிது சவாலாகவே இருக்கும்.
இன்று தேர்வு எழுத இருக்கும் மாணவ, மாணவிகள் அனைவரும் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற கல்விச் செய்திகள் வாழ்த்துகிறது…🌹🌹🌹🙏🙏🙏
ஆசிரியர்
“கல்விச் செய்திகள் “












