கோவில்பட்டி கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம்
கோவில்பட்டி, கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் படர்ந்தபுளி கிராமத்தில் கடந்த பிப்ரவரி 27ம் தேதி முதல் மார்ச் 5ம் தேதி வரை நடைபெற்றது.
இம்முகாமின் தொடக்க விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர்.மதிவண்ணன் தலைமை வகித்தார். கோவில்பட்டி முன்னாள் ஊராட்சி ஒன்றியத் தலைவர் கணேசன், படர்ந்தபுளி முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் வெங்கடாசலபதி, திருப்பதி மற்றும் பலர் கலந்து கொண்டு முகாமை சிறப்பித்தார்கள்.

இம்முகாமில், படர்ந்தபுளி கிராமத்தில் தூய்மைப்பணி, வேளாண்மை சார்ந்த விழிப்புணர்வு, வாக்காளர் விழிப்புணர்வு பேரணி, சட்ட விழிப்புணர்வு, சிறு தானிய உணவு சார்ந்த விழிப்புணர்வு பேரணி, பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள், அஞ்சல் சேவை விழிப்புணர்வு, டிஜிட்டல் கல்வியறிவு, நிதி கல்வியறிவு, பிளாஸ்டிக் மாசுபாடு மற்றும் அதன் தாக்கம், போதைப்பொருள் எதிர்ப்பு, கால்நடை மருத்துவ முகாம், பொது மருத்துவ முகாம், பல் மருத்துவ முகாம், இரத்த பரிசோதனை முகாம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
இம்முகாம் நாட்களில் தினமும் மாலையில் கலைநிகழ்ச்சிகள் மூலம் கிராம மக்கள் மற்றும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இம்முகாமின் நிறைவு நாளன்று விழாவில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட ஓருங்கிணைப்பாளர் முனைவர். வெளியப்பன் கலந்து கொண்டு மாணவர்களுடன் முகாமில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் பற்றி கலந்து உரையாடி ஆலோசனைகள் வழங்கி பாராட்டினார்.
நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முத்துக்குமார் நன்றி கூறினார்.














