கோவில்பட்டி கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “நுண்ணுயிரியல் துறை சார்பில் சர்வதேச கருத்தரங்கு”

கோவில்பட்டி கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “நுண்ணுயிரியல் துறை சார்பில் சர்வதேச கருத்தரங்கு”

கோவில்பட்டி கே.ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நுண்ணுயிரியல் துறை சார்பாக சர்வதேச அளவிலான இரண்டு நாட்கள் கருத்தரங்கு மற்றும் கல்லூரிகளுக்கு இடையிலான போட்டிகள் “மைக்ரோபெஸ்ட் – 2026” நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை கல்லூரியின் முதல்வர் முன்னிலை வகித்து துவங்கி வைத்தார். முதுநிலை இரண்டாமாண்டு மாணவி மரியா ஜோன்ஸ் வரவேற்றார். இத்துறையின் தலைவர் கருத்தரங்கின் மைய கருத்தை பற்றி எடுத்துரைத்தார். சிறப்பு விருந்தினராக இத்துறையின் முன்னாள் மாணவரும் அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி பேராசிரியருமான முனைவர் வெங்கடேஷ் குமரேசன், இணையம் வாயிலாக கலந்து கொண்டு “ஓமிக்ஸ் அடிப்படையிலான மருத்துவ கண்டுபிடிப்பு அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் பயன்பாடுகள்” குறித்து மாணவர்களிடையே கருத்துரையாற்றினார்.

இந்நிகழ்வில் மாணவர்களுக்கு, கருத்தரங்கின் கருப்பொருள் சார்ந்து பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் பங்கேற்றனர். இதில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை சிவகாசி, அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி அணியினர் பெற்றனர்.

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் பங்கு பெற்றவர்களுக்கு சான்றிதழ்களையும் கல்லூரி முதல்வர் வழங்கினார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கே. ஆர். கல்வி நிறுவனங்களின் இயக்குனர் அவர்களின் வழிகாட்டுதலின் படி நுண்ணுயிரியல் துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.