கடையநல்லூர் அரசு கல்லூரியில் “உண்மைத் தகவல் கண்டறிதல் “சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது

கடையநல்லூர் அரசு கல்லூரியில் “உண்மைத் தகவல் கண்டறிதல் “சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது

கடையநல்லூர் அரசு கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாக உண்மைத் தகவல் கண்டறிதல் குறித்த ஒருநாள் கருத்தரங்கம் 20.2.26 அன்று நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு ஆங்கிலத்துறை தலைவர் முனைவர்.ராம்ம்சங்கர் தலைமை வகித்தார் .சுரண்டை அரசு கல்லூரி இயற்பியல் துறை பேராசிரியர் முனைவர். நல்லமுத்து வாழ்த்துரை வழங்கினார்.  சிறப்பு விருந்தினராக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக நாட்டு நல பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர். வெளியப்பன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்விற்கு வந்திருந்த அனைவரையும் கணிதவியல் துறை தலைவர் முனைவர். மரகத கோமதி வரவேற்று பேசினார்.
இந்நிகழ்வில் நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் முனைவர். பால் மகேஷ் உண்மை தகவல் அறியும் விவரங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி நிகழ்கால இணைய வழி குற்றங்கள் மற்றும் அதனை தடுப்பது போலி செய்திகள் அதனை கண்டறிவது குறித்து விரிவாக விளக்க உரை நிகழ்த்தினார். மாணவர்கள் உண்மை தன்மை கண்டறிந்து செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டு அதன் அவசியம் குறித்தும் விளக்கி கூறினார்.

 

இதில் இணைய பாதுகாப்பு, போலீஸ் செய்திகள் மற்றும் அதன் விளைவுகள், வெறுப்பு பேச்சு அதன் விளைவுகள், இசைவு தெரிவித்தலில் உள்ள முறைகள், புறம்பான தகவல்களை கண்டறிவது, முந்தைய காலம் உண்மைகள், சமூக நீதி மற்றும் இட ஒதுக்கீடு குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இதில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவ மாணவியர் அனைவரும் கலந்து கொண்டு கருத்தரங்க பயன்பெற்றனர்.

இறுதியில் நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் கணினி அறிவியல் துறை பேராசிரியர் முனைவர்.மீனாட்சி நன்றி உரை கூறினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் முனைவர். பால் மகேஷ் செய்திருந்தார்.