தூத்துக்குடி தெற்கு புதுத்தெரு, மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் முப்பெரும் விழா:
மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கினார்
தூத்துக்குடி தெற்குபுதுத்தெரு, மாநகராட்சி பள்ளியில் ஆண்டு விழா, விளையாட்டு விழா மற்றும் ஸ்டெம் லேப் திறப்பு விழா என முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கினார். மேலும் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள ஸ்டெம் லேப் திறந்து வைத்து, அதில் 137 வகையான கருவிகள் மாணவர்கள் பாடங்களை படிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டதாக மேயர் தெரிவித்தார்

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் பிரியங்கா விழா பேருரை நிகழ்த்தினார். தூத்துக்குடி நகர்ப்புறம் வட்டார கல்வி அலுவலர் சரஸ்வதி, 38வது வார்டு கவுன்சிலர் மும்தாஜ் முன்னிலை வகித்தார்கள்.
பள்ளியின் தலைமை ஆசிரியர் பிரின்ஸ் அனைவரையும் வரவேற்றார். சட்டம் உரிமை கழகம் டாக்டர் செல்வம் கிறிஸ்டோபர், அட்வகேட் அந்தோணி பிச்சை, தூத்துக்குடி துறைமுகம் தீயணைப்பு துறை அலுவலர் பாட்ஷா, அனைவருக்கும் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கூட லிங்கம், SMC தலைவர் பரமேஸ்வரி, தலைமையாசிரியர் பிரகாஷ்,கணக்காளர் வேல்முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.

விழாவில் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விளையாட்டு விழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும், ஓவியம், கராத்தே, சிலம்பம், சிறந்த மாணவர்களுக்கு பரிசுகளும், படிப்பில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு பரிசுகளும், கலைத் திருவிழா, இல்லம்தேடி கல்வி, திருக்குறள் ஒப்புவித்தல் இதில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு பரிசுகளும்,பாராட்டு சான்றுகளும் மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் ஆணையாளர் பிரியங்கா வழங்கினார்கள்.

பள்ளியின் ஆண்டறிக்கை தலைமை ஆசிரியர் பிரின்ஸ் சமர்ப்பித்தார். ஆசிரியை பவானி பத்மா நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் பிரின்ஸ் தலைமையில் ஆசிரியைகள், ரத்னா, ஜான்சி, ஜாய்ஸ், ஜான்சி ராணி, உஷா சாந்தினி, பவானி பத்மா ஆகியோர் செய்திருந்தனர்.














