ஜவஹர்லால் நேரு பிறந்த தின பேச்சுப் போட்டி : தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி மாணவி முதலிடம்

ஜவஹர்லால் நேரு பிறந்த தின பேச்சுப் போட்டி :
தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி மாணவி முதலிடம்

ஜவஹர்லால் நேரு பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற அனைத்து கல்லூரி மாணவ மாணவிகளுக்கான பேச்சுப்போட்டியில் பஞ்சசீல நாயகன் என்று கொடுக்கப்பட்ட தலைப்பில் சிறப்பாக சொற்பொழிவாற்றிய தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி மாணவி சாண்ட்ரா மாக்ஸ்லின் முதல் பரிசான 5000/-ரூபாய்க்கான காசோலையையும் பரிசு சான்றிதழையும் பெற்று மா நில அளவிலான பேச்சுப்போட்டிக்கு தேர்வாகி உள்ளார்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நேற்று றங்க தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரிசு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது . தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார்.