சாயர்புரம் டாக்டர் ஜி.யூ. போப் கல்வியியல் கல்லூரியில் உலக ஈரநில தினம் அனுசரிப்பு
தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம், டாக்டர் ஜி.யூ. போப் கல்வியியல் கல்லூரியில் உலக ஈரநில தினம் (World Wetlands Day) 02.02.2026 அன்று சுற்றுச்சூழல் மன்றம் சார்பாக கொண்டாடப்பட்டது.
இவ்விழாவினை விரிவுரையாளர் லீதியால் ராஜசெல்வி வரவேற்புரை ஆற்றி தொடங்கினார்.

அதனைத் தொடர்ந்து முனைவர். பிரிஸ்ஸில்லா உலக ஈரநில தினம் குறித்து மிகவும் பயனுள்ள சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்டார். அவர் பேசிய முக்கிய கருத்துகள்:
ஈரநிலங்களின் வகைகள் (Types of Wetlands)
ஈரநிலங்களைப் பாதுகாப்பது எப்படி? மற்றும் ஈரநிலங்களின் பயன்கள் (How to protect Wetlands and uses of Wetlands)
ஈரநிலங்கள் உயிர்ப்பன்மையை (biodiversity) எவ்வாறு பாதுகாக்கின்றன?

இதனைத் தொடர்ந்து மாணவ- மாணவியர் மற்றும் பேராசிரியர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர். உலக ஈரநில தினத்தின் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு எடுத்துரைத்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அவர்களை ஈடுபடுத்தும் வகையில் இந்நிகழ்வு அமைந்திருந்தது.













