நாளை ஜனவரி 28 திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

நாளை ஜனவரி 28 திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

இது தொடர்பாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி இராஜகோபாலசுவாமி கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு நாளை புதன்கிழமை (ஜன.28) மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாகவும் மேலும், இதை ஈடு செய்யும் வகையில் பிப்.7-ஆம் தேதி வேலை நாளாக செயல்படும் எனவும் அறிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அமைந்துள்ள புகழ்மிக்க ராஜகோபாலசுவாமி திருக்கோயில், முதலாம் குலோத்துங்க சோழனால் (கி.பி. 1072-1122) கட்டப்பட்ட, 23 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள 1000 ஆண்டுகள் பழமையான வைணவத் திருத்தலமாகும். தென் துவாரகை என்று அழைக்கப்படும் இக்கோயிலில், ஸ்ரீ செங்கமலத் தாயாருடன் ராஜகோபாலசுவாமி அருள்பாலிக்கிறார். இக்கோயிலில் 154 அடி ராஜகோபுரம், 16 கோபுரங்கள், 18 விமானங்கள், 7 பிரகாரங்கள் மற்றும் ஹரித்ரா நதி தீர்த்தம் ஆகியவை சிறப்பம்சங்களாகும்.