100 ஆண்டைக் கடந்த அரசுப் பள்ளிகளில் விழா எடுத்து கொண்டாட உத்தரவு : 370 பள்ளிகள் இருப்பதாக தகவல்

100 ஆண்டைக் கடந்த அரசுப் பள்ளிகளில் விழா எடுத்து கொண்டாட உத்தரவு :
370 பள்ளிகள் இருப்பதாக தகவல்

தமிழக பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன், தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் நரேஷ் ஆகியோர் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது.

தமிழகத்தில் 100 ஆண்டுகளைக் கடந்து செயல்பட்ட அரசுப் பள்ளிகள் பொது மக்களின் நம்பிக்கைக்கு உரியவையாக திகழ்கின்றன. இத்தகைய பெருமைக்குரிய அரசுப் பள்ளிகளின் நூறாண்டை கொண்டாடுவதன் வாயிலாக் மாணவர்களுக்கு உத்வேகம் ஏற்றப்படும்.

அதன்படி நடப்புக் கல்வியாண்டில் (2025-26) 370 பள்ளிகள் நூறாண்டை நிறைவுசெய்துள்ளது. இந்த பள்ளிகளில் நூறாண்டு திருவிழாவை கொண்டாட வேண்டும். இத்தனை ஆண்டு விழாவோடு இணைத்து கொண்டாடும்மாறு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவு வேண்டும்.