சோழபுரம் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆசிரியர் மேம்பாட்டுத் திட்டம் நிகழ்ச்சி

சோழபுரம் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆசிரியர் மேம்பாட்டுத் திட்டம் நிகழ்ச்சி

தூத்துக்குடி மாவட்டம் சோழபுரம் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆசிரியர் மேம்பாட்டு திட்டம் 31.12.2025 அன்று காலை 10 மணி அளவில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சந்தனலெட்சுமி (சிவஸ்ரீ மேட்ச் இண்டஸ்ட்ரீஸ் உரிமையாளர் கோவில்பட்டி) கலந்துகொண்டு சிறப்பித்தார். இந்நிகழ்வில் வரவேற்புரையை கல்லூரி முதலாம் ஆண்டு பேராசிரியர் மதிக்குமார் வழங்கினார்.

விழாவிற்கு கல்லூரியின் இயக்குனர் டாக்டர். பிரேமலதா தலைமை தாங்கினார். ஆசிரியர் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் கல்லூரியின் அனைத்து பேராசிரியர்களும் தங்களுக்குரிய தலைப்பில் மாணவர்களுக்கு சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

புத்தாண்டை வரவேற்று சிறப்பு விருந்தினர் சந்தனலெட்சுமி சிறப்புரை ஆற்றினார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.

இறுதியாக கல்லூரியின் துணை முதல்வர் தங்கமதியழகன் நன்றியுரை வழங்கினார். இவ்விழாவில் கல்லூரி இயக்குனர், ஆசிரிய பெருமக்கள், மாணவ, மாணவிகள் மற்றும் அலுவலக உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.