திருநெல்வேலி லிட்டில் பிளவர் மாடல் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா
திருநெல்வேலியில் உள்ள லிட்டில் பிளவர் மாடல் மேல்நிலைப் பள்ளியில் 12.12.25 அன்று காலை பள்ளியின் தாளாளர் மரிய சூசை தலைமையில் கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக, புனித அன்னாள் கருணை இல்லத்தின் முதல்வர் அருட் சகோதரி சுசீலா கலந்து கொண்டார். மேலும், கருணை இல்லத்தைச் சேர்ந்த குழந்தைகளும் இந்நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
அக்குழந்தைகளுக்குப் பள்ளியின் சார்பாக, தாளாளர் தலைமையில் பல்வேறு பொருட்களும் மதிய உணவும் வழங்கப்பட்டது.
விழாவின் ஒரு பகுதியாக, பள்ளி மாணவ மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவின் முடிவில், பள்ளி மாணவ மாணவிகளுக்கு பள்ளியின் சார்பாக கிறிஸ்துமஸ் கேக் வழங்கப்பட்டது.












