டி.ஆர்.பி.( TRB ) – உதவிப்பேராசிரியர் தேர்வு : நுழைவுச் சீட்டு ( ஹால் டிக்கெட் ) வெளியீடு.

டி.ஆர்.பி.( TRB ) – உதவிப்பேராசிரியர் தேர்வு : நுழைவுச் சீட்டு ( ஹால் டிக்கெட் ) வெளியீடு.

ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கை எண் .04 / 2025 , நாள் 16.10.2025 இன்படி 2025 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளுக்கான உதவிப்பேராசிரியர் தேர்வு எதிர்வரும் 27.12.2025 அன்று (காலை மற்றும் மதியம் ) நடைபெறவுள்ளது.

இத்தேர்வு 38 மாவட்டங்களில் 195 மையங்களில் நடைபெற உள்ளது . தேர்வு நடைபெறும் மையம் சார்ந்த விவரங்கள் தேர்வர்களின் நுழைவு சீட்டில் உள்ளது . இத்தேர்விற்கு விண்ணப்பித்த தேர்வர்களுக்கு நுழைவு சீட்டு ( ஹால் டிக்கெட் ) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் https://www.trb.tn.gov.in/ ) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
எனவே , தேர்வர்கள் 11.12.2025 இன்று முதல் அவர்களது பயனர் ஐடி மற்றும் கடவுச் சொல் ( Pass Word ) ஆகியவற்றை உள்ளீடு செய்து தங்களுக்குரிய நுழைவுச் சீட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நுழைவு சீட்டு பதிவிறக்கம் செய்வதில் ஏற்படும் இடர்ப்பாடு மற்றும் அது தொடர்பான ஐயங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள குறை தீர்க்கும் மையத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். .

குறிப்பு :

தேர்வு மையங்கள் மாற்றம் சார்ந்த கோரிக்கைகள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது .