தூத்துக்குடி சாமுவேல்புரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
HCL அறக்கட்டளை, M.S. சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை (MSSRF) உடன் இணைந்து, தூத்துக்குடி சாமுவேல்புரம் , மாநகராட்சி மேல்நிலை பள்ளியில் கடல் குப்பைகள் குறித்த பள்ளி அளவிலான சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நவம்பர் 12 புதன்கிழமை நடைபெற்றது.

கடல் குப்பைகள் மற்றும் கடல் சுற்றுச்சூழல் அமைப்பில் அதன் தீங்கு விளைவிக்கும் விளைவுகள் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இந்த நிகழ்ச்சி நோக்கமாகக் கொண்டது.
குறிப்பாக பேய் வலைகள் மற்றும் கடல் பல்லுயிர் பெருக்கத்தில் அதன் தாக்கம் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு செல்வகுமார், வரவேற்புரை வழங்கினார்.அதனைத் தொடர்ந்து தலைமை ஆசிரியர் ரூபினா ரொட்ரிகோ தொடக்க உரை நிகழ்த்தினார்.

HCL அறக்கட்டளையின் மேலாளர் டாக்டர். சுப்புராமன், மன்னார் வளைகுடா பகுதியில் HCL அறக்கட்டளையின் பல்வேறு முயற்சிகள் மற்றும் சமூக மேம்பாட்டு நடவடிக்கைகளை எடுத்துரைக்கும் சிறப்பு உரையை நிகழ்த்தினார்.
டாக்டர். சிவா, விஞ்ஞானி, எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை, கடல் குப்பைகள், அதன் சுற்றுச்சூழல் தாக்கங்கள் மற்றும் கைவிடப்பட்ட, தொலைந்து போன மற்றும் நிராகரிக்கப்பட்ட மீன்பிடி வலைகள் , பேய் வலைகள், பிளாஸ்டிக்கள் ஏற்படும் அச்சுறுத்தல்கள் குறித்து உரை நிகழ்த்தினார் .
இந்த நிகழ்ச்சியை அபிராஜ் மற்றும் ஜேம்ஸ் ரோபோசன் ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.
120க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த நிகழ்வில் ஆர்வத்துடன் பங்கேற்று பேச்சாளர்களுடன் உரையாடி கேள்விகளைக் கேட்டனர் மற்றும் கடல் பாதுகாப்பு குறித்து தகவலை மிகுந்த ஆர்வத்துடன் கேட்டனர். ஆசிரியர்கள் கலந்து கொண்டனர் .












