தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரி மற்றும் கடல்சார் கல்வி மற்றும் பயிற்சி அகாடமி புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரி மற்றும் கடல்சார் கல்வி மற்றும் பயிற்சி அகாடமி புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரி, மற்றும் கடல்சார் கல்வி மற்றும் பயிற்சி அகாடமி, (AMET) அமெட் பல்கலைக்கழகம், சென்னை ஆகியவற்றுக்கு இடையில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்தாகியுள்ளது.

கடல் மற்றும் தொழில்நுட்பக் கல்வியில் முன்னணியில் திகழும் இப்பல்கலைக்கழகத்துடன் இணைந்துள்ள இந்த ஒப்பந்தம், கல்வி ஒத்துழைப்பு, திறன் மேம்பாடு, ஆராய்ச்சி கூட்டாண்மை, மாணவர் பரிமாற்றம் மற்றும் சமூக பங்களிப்பு போன்ற துறைகளில் முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மேலும், தொழில்நுட்ப பரிமாற்றம், வேலைவாய்ப்பு மேம்பாடு, நிலையான வளர்ச்சி ஆகியவற்றை, குறிப்பாக கடற்கரை மற்றும் கடல்சார் துறைகளில் ஊக்குவிக்கும் நோக்கத்துடன் ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வை சிறப்பாகச் செய்ய தொடர்ந்து ஆதரவு வழங்கும் நிர்வாகத்திற்கும், செயலாளருக்கும், மேலும் டாக்டர். ராஜேந்திரன், துணைவேந்தர், AMET பல்கலைக்கழகம், சென்னை மற்றும் அப்பல்கலைக்கழக நிர்வாகத்திற்கும் மனமார்ந்த நன்றிகளை கல்லூரி சார்பாக தெரிவிக்கப்பட்டது.