தீபாவளி சிறப்பு விடுமுறை: நாளை (அக். 25) பள்ளிகள் இயங்கும்- தமிழக அரசு அறிவிப்பு
பொதுமக்களின் வேண்டுகோள் மற்றும் வசதியைக் கருத்தில் கொண்டு, பயண நெரிசலைத் தவிர்க்கும் வகையில் தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாளான அக்டோபர் 21, செவ்வாய்க்கிழமை அன்றும் பொது விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு, நாளை சனிக்கிழமை (அக்டோபர் 25) அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிகளும் முழுநேரம் செயல்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

மேலும் நாளை அக்டோபர் 25, சனிக்கிழமை அனைத்து அரசு, தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை மற்றும் மாநகராட்சிப் பள்ளிகள் அனைத்தும் பணி நாளாகச் செயல்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தது.
இதனைத் தொடர்ந்து, மாவட்டக் கல்வித்துறை அதிகாரிகள் அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். அதில், “நாளை (அக்டோபர் 25) பள்ளிகள் வழக்கம் போல் முழுநேரம் செயல்படும். மேலும், அக்டோபர் 21ஆம் தேதி செவ்வாய்க்கிழமைக்குரிய பாடத்திட்ட அட்டவணைப்படி வகுப்புகள் நடைபெறும்” என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.












