பாலிடெக்னிக் மாணவர்களுக்கு திறன் மேம்பாடு சார்ந்த வினா வங்கி: தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் வெளியீடு
தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் (DOTE), இந்த கல்வி ஆண்டுக்கான பாலிடெக்னிக் மாணவர்களுக்காக, விரிவான வினா வங்கி (Question Bank) ஒன்றை அதன் இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.
இந்த கல்வி ஆண்டிற்கான பாலிடெக்னிக் மாணவர்களுக்காக, உயர்கல்வித் துறையின் கீழ் இயங்கும் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் (DOTE) விரிவான வினா வங்கியை (Question Bank) இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

5 முக்கிய பாடங்களுக்கு வெளியீடு:
முதல் கட்டமாக, சிவில் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் ஆகிய ஐந்து முக்கிய பாடப்பிரிவுகளுக்கான வினா வங்கி தயாரிக்கப்பட்டுள்ளது.
பாலிடெக்னிக் கல்லூரிகளின் முதல்வர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைவரும், இந்த வினா வங்கிகள் குறித்த தங்கள் கருத்துகளையோ அல்லது விமர்சனங்களையோ இந்த மாத இறுதிக்குள் DOTE இணையதளம் மூலம் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
பெறப்படும் கருத்துகளின் அடிப்படையில், நியாயமான ஆலோசனைகள் இறுதி வினா வங்கியைத் தயாரிக்கும்போது கருத்தில் கொள்ளப்பட்டு, அதன் பின்னர் அது மாணவர்களின் பயன்பாட்டிற்காக பதிவேற்றம் செய்யப்படும்.
வினா வங்கியைத் தேர்வின்போது மட்டுமல்லாமல் தொடர்ந்து வாசித்து வர வேண்டும் என்று மாணவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏனெனில் இதுதொடர்பான பாடங்களில் அதிக மதிப்பெண்கள் பெற உதவும். இந்த வினா வங்கி, DOTE அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்களை உள்ளடக்கிய நிபுணர் குழுவால் தயாரிக்கப்பட்டது என்றும், 2-ம் கட்டமாக மற்ற பாடங்களுக்கான வினா வங்கி தயாரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது












