NEET UG 2026:
தேர்வுக்கான அட்டவணை தேசியத் தேர்வு முகமை ( NTA ) விரைவில் வெளியீடு
தேசியத் தேர்வு முகமை (NTA) விரைவில் நீட் யுஜி 2026 தேர்வுக்கான அட்டவணையை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பு, நாடு முழுவதும் உள்ள மருத்துவ ஆர்வலர்களுக்கான விண்ணப்ப செயல்முறையைத் தொடங்கும்.
நீட் யுஜி என்பது இந்தியாவில் இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய அளவிலான நுழைவுத் தேர்வாகும். இத்தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி, அசாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தெலுங்கு மற்றும் உருது உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்படும். 2025-ல் 22 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பதாரர்களுடன், நீட் தொடர்ந்து இந்தியாவின் மிகப்பெரிய நுழைவுத் தேர்வாக உள்ளது.

எனவே தற்போது அனைத்து மாணவர்களின் கவனமும் இந்தியாவில் இளங்கலை மருத்துவக் கல்விக்கு நுழைவாயிலாக இருக்கும் முக்கியத் தேர்வான நீட் யுஜி 2026 (NEET UG 2026) மீது திரும்பியுள்ளது.
தேசியத் தேர்வு முகமை (NTA) விரைவில் நீட் யுஜி 2026 தேர்வுக்கான அட்டவணையை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பு, நாடு முழுவதும் உள்ள மருத்துவ ஆர்வலர்களுக்கான விண்ணப்ப செயல்முறையைத் தொடங்கும்.
முந்தைய ஆண்டுகளில் வெளியான அறிவிப்பு தேதிகளின் அடிப்படையில் பார்க்கையில், நீட் யுஜி 2026 குறித்த அதிகாரப்பூர்வ அறிவிக்கை ஜனவரி 2026-ன் இறுதியில் அல்லது பிப்ரவரி 2026 முதல் வாரத்தில் வெளியாக அதிக வாய்ப்புள்ளது.
நீட் யுஜி 2023 அறிவிக்கை மார்ச் 6 அன்று வெளியாகி பதிவு ஏப்ரல் 6 வரை நடந்தது.
நீட் யுஜி 2024 அறிவிக்கை பிப்ரவரி 9 அன்று வெளியாகி பதிவு மார்ச் 16 வரை நீட்டிக்கப்பட்டது.
நீட் யுஜி 2025 பிப்ரவரி 7 அன்று அறிவிக்கை வெளியாகி பதிவு மார்ச் 7 வரை நடைபெற்றது.
இதனை கருத்தில் கொண்டு, நீட் யுஜி 2026 அறிவிக்கை ஜனவரி 2026 இறுதிக்குள் வெளியாகலாம் என்றும், விண்ணப்ப செயல்முறை பிப்ரவரி முதல் வாரம் முதல் மார்ச் முதல் வாரம் வரை நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












