தூத்துக்குடி தஸ் நேவிஸ் மாதா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அப்துல் கலாம் பிறந்தநாள் விழா

தூத்துக்குடி தஸ் நேவிஸ் மாதா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அப்துல் கலாம் பிறந்தநாள் விழா

ஏபிஜே அப்துல் கலாம் பிறந்தநாள் விழா தூத்துக்குடி தஸ்நேவிஸ் மாதா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தாளாளர் அருட்சகோதரி பெர்னதத் மேரி , தலைமை ஆசிரியர் அருட்சகோதரி ஜெயந்தி மற்றும் திண்டுக்கல் மாநிலக் கல்வி ஒருங்கிணைப்பாளர் அருட் சகோதரி ஜெபமாலை தலைமையில் நடைபெற்றது.

மாணவி ஹன்சிகா ,ஜெனிதா சொற்பொழிவு ஆற்றினார்கள்.

மாணவி ரனோஷா கவிதை மற்றும் ஸ்ரீ ஹரிணி, பால இசக்கி பாடல் பாடினார்கள்.

மேலும் உலக விண்வெளி வாரத்தை முன்னிட்டு மகேந்திரகிரி இஸ்ரோ மையம் சார்பில் “விண்வெளி வாழ்வின் சவால்கள் ஈர்ப்பின்றி ஓர் உலகம்” என்ற தலைப்பில் நடந்த கட்டுரைப் போட்டியில் நமது பள்ளி மாணவி ஆக்னஸ் பினொலியா மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்றதற்கு பல்வேறு பரிசுகளையும் சான்றிதழ்களையும் பெற்றதால், திண்டுக்கல் மாநில கல்வி ஒருங்கிணைப்பாளர் அருட் சகோதரி ஜெபமாலை விழாவில் மாணவியை கௌரவப்படுத்தினார்.