அப்துல் கலாம் பிறந்த நாளை இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடிய கடையநல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள்

அப்துல் கலாம் பிறந்த நாளை இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடிய கடையநல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள்

கடையநல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நாட்டு நலப்பணித் திட்டம் சார்பாக 15.10.25 அன்று முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளை இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடும் வகையில் இன்று இளைஞர் எழுச்சி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

பேரணியை கடையநல்லூர் அரசு கல்லூரி முதல்வர் பொறுப்பு வகிக்கும் ஆங்கிலத்துறை தலைவர் முனைவர். ராம் சங்கர் துவக்கி வைத்தார். கடையநல்லூர் காவல் உதவி ஆய்வாளர் முன்னிலை வகித்தார்.

இதில் வளமான தேசத்திற்கு வலிமையான இளைஞர்கள் என்று முழக்கமிட்டவாறு மாணவ-மாணவிகள் கடையநல்லூர் பேருந்து நிலையம் முதல் நகராட்சி அலுவலக மணிக்கூண்டு வரை பேரணியாக சென்றனர். பேரணியின் இறுதியில் இளைஞர் எழுச்சி குறித்தும் அப்துல் கலாம் போதனைகள் குறித்தும் மாணவர்களிடையே எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இப்பேரணியில் ஆங்கிலத்துறை பேராசிரியர்கள் பேபி மாலினி, சண்முகப்பிரியா, கணிதவியல் துறை பேராசிரியர்கள் ஆறுமுகம், சரவணன் ஆகியோர் பங்கு பெற்றனர்.

பேரணிக்கான ஒருங்கிணைப்பை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர். பால் மகேஷ் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர். குரு பிரசாத் ஆகியோர் இணைந்து செய்திருந்தனர். இதில் திரளான மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பங்கு பெற்று பெற்றனர்.