நெட் தேர்வு டிசம்பர் 31 ல் ஆரம்பம் : தேசிய தேர்வுகள் முகமை ( என்டிஏ ) தகவல்

நெட் தேர்வு டிசம்பர் 31 ல் ஆரம்பம் :
தேசிய தேர்வுகள் முகமை ( என்டிஏ ) தகவல்

நெட் தேர்வுகள் டிசம்பர் 31-ந்தேதி முதல் ஜனவரி 7-ந்தேதி வரை பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட உள்ளன.

ஜூன், டிசம்பர் என ஆண்டிற்கு இருமுறை கணினி வழியில் நெட் தேர்வு நடைபெறும். இந்த தேர்வை பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) ஒப்புதலுடன் தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) நடத்துகிறது.

அதன்படி 2025-ம் ஆண்டின் முதல் பருவத்துக்கான தேர்வு, கடந்த ஜூன் 25-ந்தேதி முதல் ஜூன் 29-ந்தேதி வரை நடைபெற்றது. அதற்கான தேர்வு முடிவுகள் ஜூலை 22 அன்று வெளியிடப்பட்டன.

இதனை தொடர்ந்து, இந்திண்டின் 2-ம் கட்ட டிசம்பர் பருவத்துக்குரிய நெட் தேர்வுக்கான அறிவிப்பாணை சமீபத்தில் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் நெட் தேர்வுக்கான கால அட்டவணையை என்டிஏ தற்போது வெளியிட்டுள்ளது.

அதன்படி 83 பாடங்களுக்கான நெட் தேர்வுகள் டிசம்பர் 31-ந்தேதி முதல் ஜனவரி 7-ந்தேதி வரை பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட உள்ளன.

இதுசார்ந்த கூடுதல் தகவல்களை ugcnet.nta.nic.in/www.nta.ac.in என்ற இணையதளத்தில் அறியலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011-69227700/40759000 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று என்டிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.