அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தை தூய்மைபடுத்திய விஜய் கட்சியினர் : வீடியோ வெளியீடு : பள்ளித் தலைமை ஆசிரியை பணியிட மாற்றம்

அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தை தூய்மைபடுத்திய விஜய் கட்சியினர் :
வீடியோ வெளியீடு :
பள்ளித் தலைமை ஆசிரியை பணியிட மாற்றம்

கரூர் அருகே அரசுப் பள்ளி வளாகத்​தை தூய்​மைப் படுத்தியதாக தவெக​வினர் சமூக வலை​தளங்​களில் வீடியோ வெளி​யிட்​டிருந்தனர். இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில் அப்​பள்​ளி​யின் தலைமை ஆசிரியை 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குழித்தலை பள்ளிக்கு பணி​யிட மாற்​றம் செய்​யப்​பட்​டுள்ளார்.

கரூர் மாவட்​டம் தென்​னிலையில் அரசு மேல்​நிலைப் பள்ளி செயல்​பட்டு வரு​கிறது. கடந்த சில தினங்​களுக்கு முன்பு இப்​பள்​ளிக்கு வந்த சில இளைஞர்​கள், பள்ளி வளாகத்​தைச் சுத்​தம் செய்​வ​தாக தலைமை ஆசிரியரிடம் கூறி​யுள்​ளனர்.

அதற்கு பள்​ளி​யின் தலைமை ஆசிரியை சுஜாதா சியாமளா ஒப்​புதல் அளித்​ததைத் தொடர்ந்​து, அவர்​கள் பொக்​லைன் இயந்​திரத்​துடன் வந்து பள்ளி வளாகத்​தைச் சுத்​தம் செய்​துள்ளனர்.

இதை வீடியோ​வாகப் பதிவு செய்த இளைஞர்​கள், தமிழக வெற்​றிக் கழகம் சார்​பில் சுத்​தம் செய்து கொடுக்​கப்​பட்​ட​தாக சமூக வலை​தளங்​களில் வெளி​யிட்​டிருந்​தனர். அதில் பள்​ளித் தலைமை ஆசிரியை படமும் இடம் பெற்​றிருந்​தது.

இதற்​கு, தமிழ்​நாடு அறம்​சார் ஆசிரியர் சங்​கங்​களின் கூட்​டமைப்பு எதிர்ப்பு தெரி​வித்​ததுடன், “முன் அனு​மதி பெறாமல் அரசி​யல் கட்​சி​யினர் இது​போல பணி​களை மேற்​கொண்டு சமூக வலை​தளத்​தில் பதி​விட்ட நடவடிக்​கை​யை, அரசுப் பள்​ளியை விளம்​பரத்​துக்​காகப் பயன்​படுத்​தி​ய​தாகத்​தான் கருத முடி​யும்.

மேலும், பள்ளி மாணவர்​களிடம் அக்​கட்​சி​யினர் அரசி​யல் குறித்து பேசி​யுள்​ளனர். எனவே, இந்த விவ​காரத்​தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்​டும்” என வலி​யுறுத்​தி​யுள்ளது.