சென்னை ரைபிள் கிளப் 50 வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடும் சாம்பியன்சிப் – 2025 போட்டி :
தூத்துக்குடி டிலைட் ரைபிள் அகாடமி தங்கம் வென்று சாதனை
தூத்துக்குடி மீள விட்டானில் அமைந்திருக்கும் டிலைட் பப்ளிக் பள்ளியின் ஒரு அங்கமாக டிலைட் ரைப்பிள் அகாடமி இயங்கி வருகிறது. டிலைட் ரைபிள் அகாடமியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு நன்கு தேர்ந்த பயிற்சியாளர்களால் ஏர் ரைபிள் / ஏர் பிஸ்டல் சுடுவதற்கு பயிற்சி அளித்து வரப்படுகிறது.
செப்டம்பர் 6, சனிக்கிழமை முதல் செப்டம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை வரை தமிழ்நாடு துப்பாக்கி சுடும் சங்கத்தின் கீழ் சென்னை ரைபிள் கிளப் 50 வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடும் சாம்பியன்சிப் 2025, சென்னை வேளச்சேரியில் உள்ள குரு ஞானக் கல்லூரியில் உள்ள சாரா கார்கில் துப்பாக்கி சுடுதளத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் டிலைட் பப்ளிக் பள்ளி மாணவர்கள், டிலைட் பப்ளிக் பள்ளியின் செயலாளர் மற்றும் டிலைட் ரைபிள் அகாடமியின் உறுப்பினர்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டர் / ஏர் ரைபிள் போட்டிகளில் பங்கேற்றனர்.

இப்போட்டியில் மெர்லின் பிரமிளா மற்றும் பர்னபாஸ் கோயில் பிள்ளை தங்கப் பதக்கங்களை வென்றனர்.
இந்தப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர்களையும், டிலைட் பள்ளி மாணவ, மாணவியரையும் டிலைட் ரைபிள் அகடாமி உறுப்பினர்களையும், டிலைட் ரைபிள் அகடாமி பயிற்சியாளர்களின் முயற்சிகளையும் டிலைட் பப்ளிக் பள்ளியின் தலைவர் ஜெயசீலன், பள்ளி முதல்வர் சோபியா செல்வராணி,
தாளாளர் பிரபாகரன் ஜான் ஜெயக்குமார் ஊக்குவித்து பாராட்டினர்.
புதிதாக தொடங்கப்பட்ட டிலைட் ரைபிள் அகாடமிக்கு இது ஒரு புதிய மைல் கல்லாகும்












