தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் முன்னாள் மாணவியர் சந்திப்பு
தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் 30.08.2025 அன்று வேதியியல் துறையின் சார்பாக முன்னாள் மாணவியர் சந்திப்பு நடைபெற்றது.
வேதியியல் துறைத் தலைவர் முனைவர். கோகிலா சுபத்ரா கிறிஸ்டி வரவேற்புரை வழங்கினார்.
ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியின் முன்னாள் மாணவி வைலட் ஜெமீமா (1990-1993), தகவல் தொழில்நுட்பத் தலைவர், STL டிஜிட்டல் வரையறுக்கப்பட்ட குழு மாணவிகள் ஒவ்வொருவரும் தங்கள் துறையின் மூலம் கிடைக்கும் அறிவு சார்ந்த செயல்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டால் பணி பார்க்கக் கூடிய தளத்தில் முதன்மையான இடத்தைப் பெறலாம் என்று எடுத்துரைத்தார்.

முன்னாள் மாணவியாகப் பயின்ற போது உள்ள அனுபவங்களை சிறப்பான முறையில் பகிர்ந்து கொண்டார்.
வேதியியல் துறை முதுகலை இரண்டாம் ஆண்டு மாணவி அபிதா மற்றும் இளங்கலை இரண்டாம் ஆண்டு மாணவிகள் பவித்ரா மற்றும் நந்தினி ஆகியோர் கலை நிகழ்ச்சிகள், வேடிக்கை விளையாட்டுகள் பலவற்றை நிகழ்த்தினர்.
முன்னாள் மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர். தோராயமாக 38 மாணவிகள் கலந்து கொண்டனர்.
வேதியியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர். சங்கரவடிவு நன்றியுரை வழங்கினார்.
இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை வேதியியல் துறைப் பேராசிரியர் அனைவரும் இணைந்து செய்திருந்தனர்.












