தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரி 50 வது ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு மினி மாரத்தான் : மேயர் ஜெகன் பெரியசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்

தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரி 50 வது ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு மினி மாரத்தான் : மேயர் ஜெகன் பெரியசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்

தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியின் 50 வது ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.
தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரி மற்றும் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி இணைந்து நடத்தும் மினி மாரத்தான் போட்டி 30.08.2025 சனிக்கிழமை காலை நடைபெற்றது.

போட்டிக்கு சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி மாநகராட்சியின் மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கல்லூரி முதல்வர் மேயர் ஜெகன் பெரியசாமி – க்கு பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.

ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியின் முதல்வர். முனைவர். அருட்.சகோரி. ரூபா
மற்றும் கல்லூரியின் மேன்மையாளர் முனைவர். அருட் சகோதரி பாத்திமா லூயிஸ், துணை முதல்வர் முனைவர். மதுரவல்லி தலைமை தாங்கினர்கள்.

போட்டியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பிற துறையினர்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் காவல்துறையினர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். இப்போட்டியானது பெல் ஹோட்டலில் இருந்து முத்து நகர் விளக்கு வரை நடைபெற்றது.

இப்போட்டியில் பெண்கள் பிரிவில் முதல் 50 பேருக்கு மரக்கன்றுகளும், ஆண்கள் பிரிவில் முதல் 50 பேருக்கு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.

செப்டம்பர் 20 அன்று நடைபெறும் ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரி பொன்விழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு பெண்கள் பிரிவினருக்கும், ஆண்கள் பிரிவினருக்கும் தனித்தனியாக முதல் பரிசாக 1500, இரண்டாம் பரிசாக 1000, மூன்றாம் பரிசாக 500 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அத்துடன் மினி மாரத்தான் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்களும் உணவுகளும் வழங்கப்பட்டன.