பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு அட்டவணை அறிவிப்பு
அரசு,அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

6 முதல் 8 ம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 15 முதல் 25 ஆம் தேதி வரையிலும், 9 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 15 முதல் 26 ஆம் தேதி வரையிலும் 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 10 முதல் 25ஆம் தேதி வரையிலும் காலாண்டு தேர்வுகள் நடைபெற உள்ளன.
காலாண்டு விடுமுறை:
செப்டம்பர் 27 ம் தேதி முதல் அக்டோபர் 5 ம் தேதி வரை 9 நாட்கள் காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.













