TET Exam 2025: ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி மாற்றம்
:
2025-ம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தேதிகள் நவம்பர் 15 மற்றும் 16 ஆக மாற்றப்பட்டுள்ளன. ஆசிரியர் தேர்வு வாரியம் நிர்வாக காரணங்களுக்காக இந்த மாற்றத்தை அறிவித்துள்ளது.
(Teachers Recruitment Board – TRB), இந்த ஆண்டுக்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (தாள்-I மற்றும் தாள்-II) குறித்த அறிவிப்பை ஆகஸ்ட் 11, 2025 அன்று தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (http://www.trb.tn.gov.in) வெளியிட்டது.
முன்னதாக, இந்தத் தேர்வுகள் நவம்பர் 1, 2025 மற்றும் நவம்பர் 2, 2025 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, அந்த அறிவிப்பு திருத்தப்பட்டுள்ளது.
அதன்படி, தாள்-I தேர்வு நவம்பர் 15, 2025 அன்றும், தாள்-II தேர்வு நவம்பர் 16, 2025 அன்றும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் இந்த மாற்றத்தைக் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஏற்கனவே தேர்வு அறிவித்த தேதிகளில் கல்லறைத் திருநாள் வருகிறது எனவே வேறு தேதிகளில் தேர்வை நடத்த வேண்டும் என்று இபிஎஸ் அரசுக்கு கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது.












