தூத்துக்குடி வடக்கு பத்திரகாளி அம்மன் கோயில் தெரு மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் மகிழ் முற்றம் தொடக்க விழா
தூத்துக்குடி வடக்கு பத்திரகாளி அம்மன் கோயில் தெரு மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் (11.07.2025) “மகிழ்முற்றம்” தொடக்கவிழா தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது.
பள்ளித்தலைமையாசிரியை தங்கமணி அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
விழாவினை தூத்துக்குடி மாமன்ற உறுப்பினர் மரிய கீதா தலைமை தாங்கினார். SMC உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
சிறப்பு விருந்தினராக வட்டார வளமைய மேற்பார்வையாளர் பார்வதி கலந்து கொண்டு மாணவர்களுக்கு மகிழ்முற்றம் குறித்தும் அதன் பணிகள் குறித்தும் விரிவாக எடுத்துக்கூறினார்.
மகிழ் முற்றம் மதிப்பீட்டு பலகை சிறப்பு விருந்தினர்களால் திறந்து வைக்கப்பட்டது. உறுதிமொழி அனைவராலும் எடுக்கப்பட்டது.
குறிஞ்சி, முல்லை,மருதம், நெய்தல், பாலை ஆகிய குழுக்களின் மாணவ தலைவர்கள் மற்றும் அதன் பொறுப்பாசிரியர்கள் அறிமுகப்படுத்தப்பட்டு தங்கள் குழு பற்றி பேசினார்கள்.
பள்ளி உதவி தலைமை ஆசிரியை ஜாய்சி நன்றி கூறினார்.














