பிளஸ் 2 மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள் வெளியீடு :

பிளஸ் 2 மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள் வெளியீடு :

இதுகுறித்து தமிழகத்தில் விவரம்: பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 3 முதல் 25 ம் தேதி வரை நடைபெற்றது.அதற்கான முடிவுகள் மே 8 ம் தேதி வெளிவந்தது.

இணையதளம் :

தேர்வு எழுதியவர்களில், மறுகூட்டல், மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றம் உள்ள மாணவர்களின் பட்டியல் இன்று (ஜூன் 23) தேர்வுத் துறையின் www.dge.tn.gov.in
scan.tngdge. in எனும் இணையதளத்தில் இந்த விவரங்களை மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்.

இந்த பட்டியலில் இடம்பெறாதவர்களின் விடைத்தாள்களில் எந்த மாற்றமும் இல்லை என்பது தெரிவிக்கப்படுகிறது. மதிப்பெண் மாற்றம் உள்ள மாணவர்கள் மேற்கண்ட இணையதளத்தில் இருந்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் தேதி விவரம் பின்னர் வெளியிடப்படும்.