தமிழ் நாட்டில் இளங்கலை மருத்துவ படிப்பிற்கு 11,750 பேருக்கு மட்டுமே வாய்ப்பு :
நீட் தேர்வு வெற்றி பெற்ற மாணவர்கள் மற்ற மருத்துவ படிப்பில் சேர வேண்டும், அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல்
தமிழகத்தில் நீட் தேர்வில் 76,181 பேர் தேர்ச்சி பெற்று இருந்தாலும், இளங்கலை மருத்துவ படிப்புகளில் 11,850 பேருக்கு மட்டுமே வாய்ப்புள்ளது என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.
நீட் தேர்வு எழுதிய மாணவ மாணவிகளுக்கு மனநல ஆலோசனை வழங்கும் திட்டத்தை சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் நேற்று சென்னை தேனாம்பேட்டையில் தொடங்கி வைத்தார்.
அப்போது நீட் தேர்வில் 76,181 பேர் தேர்ச்சி பெற்றிருந்தாலும் 11,850 பேருக்கு மட்டுமே எம்பிபிஎஸ் படிக்க வாய்ப்புள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்
மேலும் இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு நீட் தேர்வுகளில் தேர்ச்சி பெறாத மாணவ மாணவிகளுக்கு மனநல ஆலோசனை வழங்கும் திட்டம், 4 வது ஆண்டாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய 1,35,715 பேரில் 76,181 பேர் தேர்ச்சி பெற்றனர் இளங்கலை மருத்துவ படிப்புகளில் 11,750 பேருக்கு மட்டுமே வாய்ப்புள்ளது.
இளங்கலை மருத்துவ படிப்பிற்கு வாய்ப்பு கிடைக்காத மற்ற மாணவர்கள் பல் மருத்துவம், நர்சிங், பாராமெடிக்கல்,
சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி போன்ற படிப்புகளை படிக்கலாம். இதில் ஏறத்தாழ 20,000 க்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன.
எனவே இளங்கலை மருத்துவ படிப்பிற்கு சீட் கிடைக்காத மாணவர்கள் அதனை எண்ணி வருந்தாமல் மற்ற மருத்துவ படிப்புகளை படிக்க வேண்டும் என்றும்
மேலும் நீட் தேர்வு இல்லாமலேயே நேரடியாக 12 ஆம் வகுப்பு மதிப்பெண்களை வைத்து சேரக்கூடிய கால்நடை மருத்துவம், யோகா போன்ற படிப்புகள் உள்ளன. எனவே மாணவர்கள் அடுத்தடுத்து இருக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.












