தூத்துக்குடியில் குமிழ் முனை பதிப்பகத்தின் சார்பில் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது

தூத்துக்குடியில் குமிழ் முனை பதிப்பகத்தின் சார்பில் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது

தூத்துக்குடி அழகப்பா பல்கலைக்கழக மையத்தின் மாடியில் குமிழ் முனை பதிப்பகத்தின் சார்பில் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது.

ஆயிரம் பொன் அரவிந்த் எழுதிய “பிழைத்தது பட்டாம்பூச்சி ” என்ற கவிதை நூலை ஓய்வு பெற்ற தூத்துக்குடி ஆல் இந்தியா ரேடியோ இயக்குனர் முனைவர் ராதாகிருஷ்ணன் வெளியிட, புத்தக ஆசிரியர் ஆயிரம் பொன் அரவிந்தனின் நண்பர்கள் பெற்றுக் கொண்டனர் .

புத்தகத்தை ஆய்வுரையாற்றினார் வள்ளிநாயகி. தொடர்ந்து ஏற்புரை வழங்கினார் கவிஞர் ஆயிரம் பொன் அரவிந்தன். அதன் பின்னர் புத்தகம் வாசிப்பு நற்பணி மன்றத்தின் சார்பில் இலக்கிய பந்தி நிகழ்வு நடைபெற்றது.

அகநானூறு காதலி இயற்கை என்ற தலைப்பில் எழுத்தாளர் மாரிமுத்து, பெண்கள் என்ற தலைப்பில் செல்வி ஐஸ்வர்யா, பிரிவு என்ற தலைப்பில் குமிழ் முனை புத்தக வண்டி நிறுவனர் சைமன் ஆகியோர் உரையாற்றினார்கள்.

முன்னதாக வரவேற்புரையாற்றினார் இலக்கிய ஆர்வலர் பத்மநாதன்.நன்றியுரை ஆற்றினார் கலையின் குரல் நிறுவனர் கலை வளர்மணி சக்திவேல் நன்றியுரை வழங்கினார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குமிழ்முனை பதிப்பக உரிமையாளர் சைமன், கலையின் குரல் நிறுவனர் சக்திவேல் மற்றும் தூத்துக்குடி மாவட்ட புத்தக வாசிப்பு நற்பணி மன்ற தலைவர் மாரி முத்து ஆகியோர் செய்திருந்தனர் .

இந்நிகழ்வில் மணிவண்ணன் செல்வின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.