தூத்துக்குடி மாவட்டம், புதுப்பட்டி ஏ.பி.சி. வீரபாகு மேல்நிலைப் பள்ளியில் ரூபாய் 33 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறைகள் திறப்பு :
தூத்துக்குடி மாவட்டம், புதுப்பட்டி ஏ. பி. சி. வீரபாகு மேல்நிலைப் பள்ளியில் ரூ.33 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட ஆறு வகுப்பறைகள் திறக்கப்பட்டது.
இந்த கல்வி முயற்சிக்கு CSR திட்டத்தின் கீழ் நன்கொடையாக ரூபாய் 20 லட்சத்தை தூத்துக்குடி, சத்யா ஏஜென்சி பிரைவேட் லிமிடெட், நிறுவனமும்,
மீதி தொகையான ரூபாய் 13 லட்சத்தை தனது பங்களிப்பாக வ.உ.சி. கல்வி அறக்கட்டளையும் வழங்கியுள்ளது.
திறப்பு விழாவில் தூத்துக்குடி சத்யா ஏஜென்ஸி பிரைவேட் லிமிடெட் நிர்வாக பங்குதாரர் ஜான் ரோஷன், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
மேலும் விழாவில் பள்ளித் தலைமையாசிரியர் வீரபாகு, மற்றும் பழைய மாணவர் வீரபாகு, வ. உ. சிதம்பரம் கல்லூரி முதல்வர் முனைவர். வீரபாகு மற்றும் ஏ. பி. சி.வீரபாகு மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் வ.உ.சிதம்பரம் கல்லூரி முதல்வர் முனைவர். வீரபாகு நன்கொடை வழங்கிய தூத்துக்குடி, சத்யா ஏஜென்சி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்தார்.
















