அரசு பாலிடெக்னிக் கல்லூரி சேர்க்கை : தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாநிலத்தில் முதலிடம், 95% சேர்க்கை முடிந்தது
தமிழகத்தில் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் 56 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், 3 இணைப்பு கல்லூரிகள் உள்ளன. இவற்றில் தொழில் நுட்பப் பட்டயப் (டிப்ளமோ) படிப்புகளுக்கு 20,635 இடங்கள் உள்ளன. இதில் முதலாமாண்டு மற்றும் பகுதி நேர படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு இணைய வழியில் கடந்த மே 7-ம் தேதி தொடங்கி ஜீன் 6 ல் நிறைவு பெற்றது. முதலாமாண்டு பட்டயப் படிப்புகளுக் கு 11,140 பேர் விண்ணப்பித்துள்ளனர். நேரடி 2ம் ஆண்டு படிப்பில் சேர 12,184 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.
சேர்க்கை தேதி நீட்டிப்பு:
இதற்கிடையே மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் பாலிடெக்னிக் கல்லூரி சேர்க்கைக்கான அவகாசமானது கால வரையின்றி நீட்டிக்கப்பட்டுள்ளது.
இணையதளம்/ நேரடி விண்ணப்பம்:
www.tnpoly.in/ எனும் இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும், விண்ணப்பிக்கும் வழி முறைகள், கட்டணம் உட்பட கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைத் தளத்தில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. இது தவிர கல்லூரிகளே இனி நேரடியாக விண்ணப்பங்களை வழங்கி சேர்க்கை நடத்தி கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
2024 – 2025 ம் ஆண்டு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 68 சதவீத இடங்கள் மட்டுமே பூர்த்தி செய்யப்பட்டன.
இந்த ஆண்டு சேர்க்கையை அதிகரிக்கும் விதமாக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பள்ளிக்கல்வித் துறையிடம் இருந்து கடந்த 2 ஆண்டுகளாக உயர் கல்வி தொடராதவர்கள் மற்றும் பத்தாம் வகுப்புக்கு பின்பு இடைநின்ற மாணவர்களின் விவரங்கள் சேகரிக்கப்படுகிறது. அத்தகைய மாணவர்களை தொடர்பு கொண்டு பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்ப்பதற்கான பணிகள் தற்போது முடுக்கிவிடப் பட்டுள்ளதாக துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
இந்நிலையில் தூத்துக்குடி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் 2025 – 2026 ம் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கை 95 சதவீதம் முடிந்து விட்டதாக கல்லூரி முதல்வர் முனைவர். முத்துராசு ( முழு கூடுதல் பொறுப்பு ) தெரிவித்தார்.
மேலும் அவர் கல்விச் செய்திகள் டாட் காம் தளத்திற்கு கூறியதாவது:
தூத்துக்குடி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் 6:பாடப்பிரிவுகள் உள்ளன.
1. அமைப்பியல் துறை ( CIVIL )
2. இயந்திரவியல் துறை ( MECHANICAL )
3.மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை ( EEE )
4.மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை ( ECE)
5.தளவாடத் தொழில் நுட்பத்துறை ( IT )
6. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை( RENEWABLE ENERGY )

இந்த ஆறு பாடப்பிரிவிலும் மூன்று ஆண்டுகால படிப்பை குறிக்கும். இதில் அமைப்பியல் துறையில் 120 இடங்களும், இயந்திரவியல் துறையில் 120 இடங்களும், மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையில் 120 இடங்களும், மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறையில் 60 இடங்களும், தளவாடத் தொழில் நுட்பத்துறையில் 60 இடங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் 30 இடங்களும் ஆக மொத்தம் 510 இடங்கள் கல்லூரியில் உள்ளது.
கல்வித் தகுதி:
இதில் முதல் 5 பாடப் பிரிவுகளுக்கு கல்வி தகுதி பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் முதலாம் ஆண்டில் சேரலாம்,12-ஆம் வகுப்பு மற்றும் தொழிற்படிப்பு ஐடிஐ முடித்தவர்கள் நேரடியாக இரண்டாம் ஆண்டு கல்லூரியில் சேரலாம்.
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை படிப்பிற்கு மட்டும் கல்வித் தகுதி 12 ம் வகுப்பு தேர்ச்சி ஆகும்.
கல்வி கட்டணம்:
கல்வி கட்டணம் முற்றிலும் இலவசம்.
சிறப்பு கட்டணம் மற்றும் வளர்ச்சிக் கட்டணமாக ஆண்டுதோறும் ரூபாய் 2187/- மட்டுமே.
பாலிடெக்னிக் கல்லூரியில் பட்டய படிப்பு முடித்தவர்கள் பொறியியல் கல்லூரியில் நேரடியாக இரண்டாம் ஆண்டு சேரலாம்.
புதிய பாடப்பிரிவு அறிமுகம் :
இந்த 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை ( RENEWABLE ENERGY ) என்ற புதிய பாடத்திட்டம் தூத்துக்குடி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது தமிழ் நாட்டில் உள்ள மொத்தம் 8 அரசினர் கல்லூரியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
1.அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி, உசிலம்பட்டி
2.மகளிர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி, மதுரை
3.அரசு பாலிடெக்னிக் கல்லூரி, ஆண்டிப்பட்டி
4. அரசு பாலிடெக்னிக் கல்லூரி, செக்காலூரனி
5.அரசினர் பாலில் கல்லூரி, நாகர்கோவில்
6.அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி, திருநெல்வேலி
7.அரசு பாலிடெக்னிக் கல்லூரி, தூத்துக்குடி.
8 பி. சி. எம். டபிள்யூ மகளிர் கல்லூரி எட்டயபுரம் ஆகிய எட்டு இடங்களில் அதிகப்படுத்தி உள்ளது…
இந்த பாடத்திட்டத்தில் தூத்துக்குடி அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் மொத்தம் 30 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது 30 இடங்களுக்கான சேர்க்கை முடிந்து விட்டது.
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை படிப்பு மொத்தம் 3 ஆண்டுகள். இதில் முதல் வருடத்தில் 3 மாதங்களுக்கு கல்லூரியில் பயில வேண்டும். அப்போது மாதம் ரூபாய் 4000 வீதம் 3 மாதங்களுக்கும் அரசு உதவித்தொகை வழங்கப்படுகிறது.
மற்றும் அடுத்த 9 மாதங்கள் படிப்பு டாடா நிறுவனத்தில் பயிற்சியாக அளிக்கப்படுகிறது.
இந்த 9 மாதங்கள் பயிற்சி காலத்தில் மாதம் 8000 ரூபாய் வீதம் 9 மாதங்களுக்கு டாடா நிறுவன குழுமம் வழங்குகிறது.
இரண்டாம் ஆண்டு 3 மாதங்கள் ரூபாய் 4250 கல்லூரியின் சார்பிலும், 9 மாதங்கள் மாதம் 9 ஆயிரம் டாட்டா குழுமம் சார்பிலும் வழங்கப்படுகிறது.
3 ம் ஆண்டில் கல்லூரி சார்பாக முதல் 3 மாதங்களுக்கு மாதம் 4500 வீதம் வழங்குகிறார்கள். மீதி 9 மாதங்களுக்கு மாதம் ரூபாய் 10,000 வீதம் டாடா குழுமம் வழங்குகிறார்கள்.
இதற்கான சேர்க்கை அனைத்தும் முடிந்து விட்டது.
மேலும் கல்லூரி முதல்வரிடம் கடந்த 2024 – 2025 ஆம் ஆண்டில் 17பாலிடெக்னிக் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதாகவும் இந்த வருடம் மேலும் 15 கல்லூரி கல்லூரிகள் மூடப்படுவதாகவும் இருப்பதற்கு காரணம் என்ன என்று கேட்ட பொழுது கல்லூரி முதல்வர் முனைவர். முத்துராசு கூறுகையில்,அது தனியார் கல்லூரிகளாக இருக்கும்.மேலும் தனியார் கல்லூரியின் உள்கட்டமைப்பு ( INFRASTRUCTURE )மற்றும் அதில் முக்கிய பாடப்பிரிவுகள் இல்லாததும், மேலும் அவர்களது சில தனிப்பட்ட காரணமாகவும் இருக்கலாம்,மற்றபடி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை வீதம் குறையவில்லை என்றார்.
மேலும் எங்களது அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு தான் வேலையில் 100% உத்திரவாதம் கொடுப்பதாகவும் தான் ஒவ்வொரு மாணவர்களுக்கும் இரண்டு வேலை வாங்கித் தருவதாகவும் கூறினார்.
மாணவர்கள் சேர்க்கை குறையவில்லை, எங்கள் கல்லூரியில் உள்ள 6 பாடப்பிரிவுகளில் மொத்தம் உள்ள 510 இடங்களுக்கு 1471 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இரண்டாம் ஆண்டு நேரடி ( LATERAL ENTRY ) சேர்க்கைக்கு மொத்தமுள்ள 186 இடங்களுக்கு 534 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாகவும் புதிய பாடப்பிரிவான புதிப்பிக்கத்தக்க ஆற்றல் துறை ( RENEWABLE ENERGY ) பாடப் பிரிவிற்கு மொத்தமுள்ள 30 இடங்களுக்கு 90 மாணவர்கள் விண்ணப்பித்துள்தாகவும் 100 % சேர்க்கை முடிந்து விட்டதாகவும், இதில் 80 சதவீதம் மாணவிகளுக்கும், 20 சதவீதம் மாணவர்களுக்கும் ஒதுக்கப் பட்டுள்ளதாக கல்லூரி முதல்வர் கூறினார்.
மேலும் முதல்வர் முத்துராசு கூறுகையில் மாநிலத்தில் எங்களது தூத்துக்குடி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி தான் சேர்க்கையில் முதலிடத்தில் உள்ளதாகவும்,தற்போது சேர்க்கை விகிதம் 95 சதவீதம் முடிந்து விட்டதாகவும்,மாணவர்கள் மீதமுள்ள 5 சதவீதம் சேர்க்கை இடத்தை வேகமாக பதிவு செய்து கல்லூரியில் சேர அழைப்பு விடுத்தார்.
மேலும் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் மூலம் வளாகத் தேர்வுகள் நடத்தப்பட்டு அனைவருக்கும் 100 சதவீதம் வேலைவாய்ப்புகள் வழங்கப்படும். தகுதியுள்ள அனைத்து பிரிவினருக்கும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும், தமிழ் புதல்வன் மற்றும் புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் தகுதியுள்ள மாணவ மாணவிகள் மாதம் எல்லோருக்கும் ஊக்கத்தொகை ரூபாய் 1000 பெற்று வழங்கப்படும் என்றும் கூறினார்.
மேலும் மாணவ மாணவிகளுக்கு தனித்தனியாக விடுதி வசதிகள் உள்ளன. முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள் வழங்கப்படும், விலையில்லா பேருந்து பயண அட்டை, ரயில் பயண கட்டண சலுகை வழங்கப்படும்.
மண்டலம் மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள வாய்ப்புகள் வழங்கப்படும். அனைத்து துறைகளிலும் திறமையான அனுபவமிக்க ஆசிரியர்கள், சிறந்த ஆய்வகங்கள் மற்றும் ஸ்மார்ட் வகுப்பறைகள் மூலம் வகுப்புகள் நடத்தப்படுகிறது.
மாணவர்களின் நலனுக்காக NSS, YRC,, RRC ஆகிய அரசு அமைப்புகள் சிறந்த முறையில் இயங்கி வருகின்றன.அனைத்து மாணவ மாணவிகளுக்கும் குழு காப்பீடு குரூப் இன்சூரன்ஸ் செயல்படுத்தப்பட்டு வருகிறது. என்பதனையும் எடுத்துரைத்தார் கல்லூரி முதல்வர் முனைவர். முத்துராசு ( முழு கூடுதல் பொறுப்பு ).
குறிப்பு :
டாடா பவரின் சூரிய சக்தி உற்பத்திப் பிரிவும், டாடா பவர் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி லிமிடெட் (TPREL) இன் முழு உரிமையாளருமான TP சோலார் லிமிடெட், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் டிப்ளமோவை அறிமுகப்படுத்துவதற்காக வழிகாட்டுதல் தமிழ்நாடு மற்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் (DoTE) உடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.















