தமிழகத்தில் மேலும் 4 புதிய அரசு கலை கல்லூரிகள் தொடங்கப்படும் :முதலமைச்சர் மு. க.ஸ்டாலின்

தமிழகத்தில் மேலும் 4 புதிய அரசு கலை கல்லூரிகள் தொடங்கப்படும்: முதலமைச்சர் மு. க.ஸ்டாலின்

அனைவருக்கும் கல்வி மற்றும் கல்லூரிக் கனவு ஆகிய திட்டத்தை செயல்படுத்தும் விதத்தில் கிராமப்புற ஏழை மாணவர்கள் கல்வியில் பயன்பெறும் வகையில்
2025 – 2026 ஆம் கல்வியாண்டில் புதிதாக 4 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அதன்படி வேலூர் மாவட்டம் – கே.வி. குப்பம், கள்ளக்குறிச்சி மாவட்டம் – உளுந்தூர்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டம் – செங்கம் மற்றும் திருச்சி மாவட்டம்- துறையூர் ஆகிய இடங்களில் 4 புதிய கல்லூரிகல் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

புதியதாக தொடங்கப்படும் கல்லூரிகள் மூலம் மேலும் 1120 மாணவர்கள் உயர்கல்வி பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.கிராமப்புற மாணவர்கள் அதிக அளவில் உயர் கல்வி பெரும் வகையில் இந்த புதிய 4 கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளது.