தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் 2025–2026 கல்வியாண்டிற்கான புதிய மாணவர்களுக்கு தமிழ்ப் புதல்வன், புதுமைப் பெண் திட்டம் குறித்த விளக்கம்: கல்லூரி முதல்வர் டாக்டர் வீரபாகு வழங்கினார்

தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் 2025–2026 கல்வியாண்டிற்கான புதிய மாணவர்களுக்கு தமிழ்ப் புதல்வன், புதுமைப் பெண் திட்டம் குறித்த விளக்கம்:
கல்லூரி முதல்வர் டாக்டர் வீரபாகு வழங்கினார்

வ. உ. சிதம்பரம் கல்லூரியில் 2025 – 2026 ம் கல்வி ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை செயல்முறையின் போது , புதிய மாணவர்கள்அவர்களின் பெற்றோர்களிடையே கல்லூரி முதல்வர் முனைவர் வீரபாகு உரையாற்றினார்.

அப்போது UMIS ( பல்கலைக்கழக மேலாண்மை தகவல் அமைப்பு – University Management & Information System ) ஐடியைப் பற்றிய விளக்கமும், அதற்குத் தேவையான தனிப்பட்ட மற்றும் கல்விச்சார்ந்த தகவல்களை சமர்ப்பிப்பதற்கான தெளிவான வழிமுறைகள் வழங்கப்பட்டது.

மேலும், தமிழ்நாட்டின் முதலமைச்சரின் முக்கியத் திட்டங்களான தமிழ்ப் புதல்வன் திட்டம் மற்றும் புதுமைப்பெண் திட்டம் குறித்து கூட்டத்தினருக்கு விளக்கமளிக்கப்பட்டது.

தகுதியுடைய மாணவர்கள் அனைவரும் இந்த பயனளிக்கும் திட்டங்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு எடுத்துரைக்கப்பட்டது.