கோவில்பட்டி எவரெஸ்ட் பள்ளியில் இலவச கோடைகால பயிற்சி முகாம்
கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்ப நாடார் மேல்நிலைப்பள்ளி மற்றும் விளாத்திகுளம் SVMR ஜவுளி ஸ்டோர் இணைந்து நடத்தும் மாணவர்களுக்கான இலவச கோடைகால பயிற்சி முகாமில் அனைத்து வகையான விளையாட்டுகள், யோகா, சிலம்பம், மற்றும் Spoken English சிறப்பான ஆசிரியர்கள் கொண்டு பயிற்றுவிக்கப் பட உள்ளன. 
இம்முகாமை பள்ளித்தலைவர் மற்றும் செயலாளர் அய்யனார் தலைமை ஏற்க, பள்ளித்தலைமையாசிரியர்
வெங்கடேசன் முன்னிலை வகித்து பயிற்சி முகாமினை தொடங்கி வைத்தார். மாணவ, மாணவிகள் இம்முகாமில் கலந்து கொண்டு பயனடைந்தனர். இம்முகாமில் ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டு
சிறப்பு செய்தனர்.












