பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்?

12-ஆம் வகுப்பு பொது தேர்வுகள் மார்ச் 3 முதல் 25ஆம் தேதி வரை நடைபெற்றது.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 15 வரை நடைபெற்றது.
அதேபோல் 11ஆம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 5 முதல் 27 வரை நடைபெற்றது. இதை அடுத்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தேர்வு முடிவுகளை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
2024 ம் ஆண்டு 12 ஆம் வகுப்பு முடிவுகள் மே 6 ஆம் தேதியும், 10 ஆம் வகுப்பு முடிவுகள் மே 10 ஆம் தேதியும் வெளியானது. ஆனால் இந்தாண்டு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 9ஆம் தேதியும், 10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் மே 19ஆம் தேதியும் வெளியிட பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

10 ம் வகுப்பு,12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை பார்ப்பது எப்படி?
தேர்வு முடிவுகள் வெளியானவுடன், மாணவர்கள் தமிழ்நாடு அரசுத் தேர்வுகளின் அதிகாரப்பூர்வ இணையதளங்களான tnresults.nic.in மற்றும் dge.tn.gov.in ஆகியவற்றில் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியைப் பதிவிட்டு முடிவுகளை அறியலாம்.
இதற்கிடையே தேர்வு முடிவுகள் முன்கூட்டியே வெளியாக வாய்ப்புள்ளதாக பரவிய தகவலுக்கு பள்ளி கல்வித்துறை அண்மையில் மறுப்பு தெரிவித்தது. தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.












