பள்ளிகள் திறப்பில் மாற்றமா?
திருச்சியில் இன்று மே தின விழாவில் பத்திரிகை நிரூபர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி அளித்தார்.
அப்பொழுது பள்ளிகளின் கோடை வெயில் தாகாகம் அதிகமாக இருப்பதனால் பள்ளித் திறப்பில் மாற்றம் இருக்குமா? என்ற கேள்விக்கு தற்பொழுது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. பள்ளிகளின் திறப்பில் மாற்றம் இருக்குமா என்பதை அந்த வேளையில் வெயிலின் சூழ்நிலையை பொறுத்து முதல்வரிடம் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும் மேலும் தனியார் பள்ளிகள் பள்ளி கட்டணம் அதிகமாக வசூலிக்க கூடாது மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
மேலும் ஆசிரியர் நியமனம் இருக்குமா என்று நிருபர்கள் கேட்ட கேள்விக்கு வழக்குகளின் தீர்ப்பு வரும் நிலையில் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் 6000 பேர் நியமனம் செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.
மேலும் தமிழ்நாடு பள்ளி இடை நிற்றல் இல்லாத மாநிலமாக செயல்படுகிறது என்றும் கூறினார்.
மேலும் அனைவருக்கும் மே தின வாழ்த்துக்களை தெரிவித்தார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.












