
கடந்த மார்ச் 3 ம் தேதி தொடங்கி மார்ச் 25 ஆம் தேதி வரை நடைபெற்ற பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வின் விடைத் தாள்கள் திருத்தம் செய்து முடிக்கபட்டு தற்பொழுது மதிப்பெண்கள் பட்டியல் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வின் முடிவுகள் வரும் மே மாதம் 9 ம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் தற்பொழுது மே 5 அல்லது 6 ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.













