தூத்துக்குடி மறை மாவட்டம். தாளமுத்து நகர் பங்கின் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இலவச ஓவியப் பயிற்சி 26 .04.2025 சனிக்கிழமை காலை முதல் மதியம் வரை மடு ஜெபமாலை மாதா ஆலய முன்பு ஓவிய நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தாளமுத்துநகர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் ஒன்றிய கவுண்சிலர் அந்தோணி தனுஸ் பாலன், தாளமுத்து நகர் வட்டார வியாபாரிகள் சங்க செயலாளர் கிராஸ் மற்றும் பொருளாளர் அந்தோணி செளந்திரராஜ் ஆகியோர் கலந்து கொண்டு துவக்கிவைத்தனர்.
நிகழ்ச்சியின் துவக்கமாக மறைந்த போப் – க்கு மெழுகுவர்த்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து ஓவிய ஆசிரியர் ஜெயந்தி சக்திவேல் அனைவருக்கும் ஓவியப் பயிற்சி அளித்தார்.
தொடர்ந்து விளையாட்டி போட்டியும் நடைபெற்றது.
மாணவ மாணவிகள் ஓவியப் பயிற்சியில் கலந்து கொண்டனர். இறுதியில் தங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்கள்.
இந்நிகழ்ச்சியில் கலையின் குரல் நிறுவனர் சக்திவேல், குமிழ்மனை புத்தக வாசிப்பு வண்டியின் நிறுவனர் சைமன், புத்தக வாசிப்பு நற்பணி மன்ற தலைவர் செல்வின், அமைப்பாளர் மாரிமுத்து கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்ச்சி ஏற்பாட்டை தூத்துக்குடி மாவட்ட கலையின் குரல் அமைப்பு மற்றும் புத்தக வாசிப்பு நற்பணி மன்றம் சிறப்பாக செய்திருந்தது.












