கல்விச் செய்திகள் இணையதளம்.
துவக்கி வைத்தார் வ.உ.சிதம்பரம் கல்லூரி முதல்வர் டாக்டர் வீரபாகு
தூத்துக்குடியை மையமாகக் கொண்டு கல்வியை மட்டுமே முன்னிலைப்படுத்தி செயல்படும் கல்விச் செய்திகள் டாட். காம் ( www.kalviseithikal. com )இன்று தனது சேவையை தொடங்கியது.
தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் கல்விக்கான கல்விச் செய்திகள் இணைய தளத்தை தூத்துக்குடி
கல்வித் தந்தை ஏ. பி. சி வீ சொக்கலிங்கம் புதல்வர்
வ.உ. சிதம்பரம் கல்லூரியின் முதல்வர் டாக்டர் வீரபாகு இன்று காலை 10:20 மணி அளவில் துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி அன்னை ஸ்டீல் நிறுவன அதிபர் கனி சேகர், தூத்துக்குடி துறைமுக சபை மெக்கானிக்கல் துறை செயற் பொறியாளர் ராஜா சோரீஸ், உதவிசெயற் பொறியாளர் லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தூத்துக்குடி மதூரா கோட்ஸ் ஸ்டோர்ஸ் காசாளர் வரதன் மற்றும் தொழில் அதிபர் செல்வராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
பள்ளி, கல்லூரி மற்றும் கல்வி நிறுவனங்களின் செய்திகளை தாங்கி வரும் கல்விச் செய்திகள் இணையதளம்
கல்விக்காக மட்டுமே தனது சேவையை தொடங்கியுள்ளது.
இந்த கல்விச் செய்திகள் இணையதளத்தை kalviseithikal.com என்று கூகுளில் டைப் செய்து இன்று முதல் தினமும் உலகின் எந்த இடத்தில் இருந்தும் பார்க்கலாம்.
இந்த கல்விச் செய்திகள் டாட் காமில் பள்ளி கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் தங்களின் செய்திகள் மற்றும் விளம்பரங்களை வெளியிட kalviseithikal@gmail.com என்ற இமெயில் முகவரிக்கு அல்லது 89036 27666 என்ற வாட்ஸாப் எண்ணிற்கு அனுப்பி வைக்கவும்.
கல்விச் செய்திகள் இணையதளத்தில் செய்திகளை இலவசமாக வெளியிட்டு தருகிறோம்..
பள்ளி மற்றும் கல்லூரி நிறுவனங்கள் தங்களின் செய்திகளை தினமும் மேற்கண்ட ஈமெயில் ஐடிக்கு அனுப்பி வைத்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறார் கல்விச் செய்திகள் டாட் காம் ஆசிரியர் பொன் பலவேச ராஜ்..
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை
வ. உ. சிதம்பரம் கல்லூரி அலுவலர்கள் இளங்குமரன், காட்வின் மற்றும் சபரி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.














