தூத்துக்குடியில் உலக பார்வை தினத்தை முன்னிட்டு இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் பாராமெடிக்கல் சயின்ஸ் மற்றும் வாஸன் கண் மருதுதுவமனை இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை முகாம் !
உலக பார்வை தினம் (World Sight Day) என்பது கண் பார்வை குறைபாடு மற்றும் பார்வையின்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தின் இரண்டாவது வியாழக்கிழமை அனுசரிக்கப்படுகிறது.
இதன் நோக்கம் நோக்கம் கண் ஆரோக்கியத்தின் முக்கியத்துவம், தடுக்கக்கூடிய பார்வையின்மை மற்றும் அனைவருக்கும் மலிவு விலையில் கண் மருத்துவச் சேவையின் அவசியத்தை வலியுறுத்துவதாகும்.

உலக பார்வை தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் பாராமெடிக்கல் மற்றும் வாஸன் கண் மருதுதுவமனை இணைந்து மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாமை தூத்துக்குடி டபிள்யூஜிசி ( WGC ) ரோடு, தந்தி ஆபிஸ் அருகில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் பாராமெடிக்கல் சயின்ஸ் கல்லூரி வளாகத்தில் வைத்து அக்டோபர் 28 ம் தேதி புதன்கிழமை மதியம் 1.00மணி முதல் 4.00 மணி வரை நடத்துகிறது.
பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள்,மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் இந்த இலவச கண் பரிசோதனை முகாமில் கலந்து கொண்டு தங்களது கண்களை இலவசமாக பரிசோதனை செய்து பயன் பெறுமாறு இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் பாராமெடிக்கல் சயின்ஸ் மற்றும் வாஸன் கண் மருதுதுவமனை நிர்வாகம் அழைக்கிறது.













