தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி லிவோரா 2026 கண்காட்சியில் மனதை கவரும் வெளிநாட்டு பறவைகள்!

தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியின் பவள விழாவை முன்னிட்டு நடைபெறும் லிவோரா 2026 கண்காட்சியில் மனதை கவரும் வெளிநாட்டு பறவைகள் இடம் பெற்றுள்ளன.
கண்காட்சியின் 2 வது நாளான இன்று காலையில் இருந்தே பள்ளி மாணவர்கள் வருகை தந்து கண்காட்சியை ஆர்வமுடன் பார்வையிட்டனர்.
கண்காட்சியில் இடம்பெற்றுள்ள வெளிநாட்டு பறவைகளை மாணவர்கள் ஆர்வத்துடன் மகிழ்ச்சி பொங்க பார்த்து ரசிக்கின்றனர்.
இன்னும் 2 நாட்கள் தான் நீங்களும் உங்கள் குழந்தையுடன் வருகை தாருங்கள்.
நாம் வாழ்நாளில் காண முடியாத இந்த அரிய பறவைகளை நம் ஊரில் பார்க்க ஒர் அரிய வாய்ப்பு, நழுவ விடாதீர்கள்.
அழைக்கிறது வ.உ.சிதம்பரம் கல்லூரி,
தூத்துக்குடி.
“பறக்கிறது என் மனம் பறவையாய் ”
வண்ணச் சிறகுகளின்
வெண்மையிலே வெளிச்சம் காட்டும் கொண்டை அழகியே !
கருமையிலே சிவப்பு தீட்டிய அழகியே !
செந்தூரமாய் சிறகடிக்கும் அமெரிக்க மயிலே !
சூரியனும் வானமும் சேர்ந்த மஞ்சள் நீலக் கிளியே !
நான்கு திசைகளில் இருந்து வந்து,
தூத்துக்குடி மண்ணில் கூடினீர் !
நீ கூண்டில் இருந்தாய் திண்டாட்டத்தில் !
என் மனமோ கொண்டாட்டத்தில் !
எம் கண்களில் வர்ணம் வரைந்தாய் !
நான் பறவையாய் இருந்திருந்தால்
பேசாமல் பேசும் உன் அழகில்,உன்னையே காதலித்திருப்பேன் !
உன்னை நினைத்து என் மனம் பறக்கிறது விண்ணில் !
நான் மயங்கி கிடக்கிறேன் மண்ணில் !
என் காதலியை விட உன்னழகில்
மயங்கி கவிதை வடிக்கிறேன் !
உன்னால் விலங்கியல் கண்காட்சியே இசையுடன் ( ஒலி ) கவிதையானதே !
ஆம்
உன்னைத் தேடி “பறக்கிறது என் மனம் பறவையாய் “.
ஆசிரியர் –












