டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஜனவரி 10 – 2027 ல் நடைபெறும் : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு !

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஜனவரி 10 – 2027 ல் நடைபெறும் :
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு !

பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக உள்ள குரூப் 4 நிலையிலான 6,574 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நேர்முக உதவியாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ), வனக்காவலர், பில் கலெக்டர், கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் காலியாகவுள்ள 6,574 இடங்கள் குரூப்-4 தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.

இந்த தேர்வுக்கு 18 வயது முதல் 32 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் நவம்பர் 05, 2026 ஆகும். இத்தேர்வு வரும் வரும் ஜனவரி 10, 2027 காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு ஒரே கட்டமாக, கொள்குறி வகை (Objective Type) வினாக்களுடன் நடைபெறும்.

 

ஆன்லைன் விண்ணப்பம்:

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்விற்கு https://www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தற்போது உள்ள காலிப்பணியிடங்கள் கலந்தாய்விற்கு முன்பாக மேலும் அதிகரிக்கப்படவும் வாய்ப்புள்ளதாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதவியின் பெயர் பணியிடங்களின் எண்ணிக்கை :

கிராம நிர்வாக அலுவலர் -291
வரி தண்டலர் -97
வருவாய் உதவியாளர் – 96
இளநிலை உதவியாளர் – 3,762
வரி வசூலிப்பவர் -107
நிர்வாக உதவியாளர் – 55
தட்டச்சர் – 1,572
சுருக்கெழுத்து தட்டச்சர் – 404
நேர்முக எழுத்தர்- 60
செயல் அலுவலர் – 46
வனக்காவலர் – 40
விற்பனை உதவியாளர் -10
ஆய்வக உதவியாளர் – 23
பதிவுறு எழுத்தர் – 19

மேற்கண்ட பதவிகளுக்கு தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுபவர்கள், தமிழ்நாடு அமைச்சுப் பணி, மாநகராட்சி பணி, தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகம், காவலர் வீட்டு வசதி வாரியம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், தமிழ்நாடு மின்பகிர்மான கழகம், தமிழ்நாடு மின்னணு நிறுவனம், தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகம், தமிழ்நாடு வக்பு வாரியம், சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையம், தமிழ்நாடு நகர்மன்ற பணி, தமிழ்நாடு தடயவியல் சார்நிலை பணி, தமிழ்நாடு கைவின பொருட்கள் வஞளர்ச்சிக் கழகம், தமிழ்நாடு தொழில்துறை முதலீட்டுக் கழகம் ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் ஆகியவற்றில் பணியில் அமர்த்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரரின் வயது வரம்பு, கல்வித் தகுதி ஆகியவை https://www.tnpsc.gov.in இணையதளத்தில் விரிவாக தரப்பட்டுள்ளன.