கோவில்பட்டி கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கு !

கோவில்பட்டி கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்   டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கு !

கோவில்பட்டி கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளம் செஞ்சிலுவைச் சங்கம் (YRC) சார்பில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் நோய் தடுப்பு முறை பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.

இந்நிகழ்வில் கல்லூரியின் முதல்வர் அறிமுகவுரை வழங்கினார். உயிர்வேதியியல் துறை பேராசிரியர் முனைவர்.சுப்புராயலு சிறப்பு விருந்தினராக பங்கேற்று டெங்கு கொசு உற்பத்தி, ஒழிப்பு முறைகள் மற்றும் டெங்கு காய்ச்சல் நோய் தடுப்பு முறை பற்றியும், டெங்கு காய்ச்சலைப் பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் தேங்கியுள்ள சுத்தமான நீரில் இனப்பெருக்கம் செய்வதால், வீட்டைச் சுற்றிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்வதன் அவசியம் பற்றியும் எடுத்துரைத்தார்.

 

மேலும், இந்நிகழ்வில் பயன்படுத்தப்படாத டயர்கள், தேங்காய் ஓடுகள், பூந்தொட்டிகள், பிளாஸ்டிக் மற்றும் பிற பொருட்களில் தண்ணீர் தேங்காமல் அகற்ற வேண்டும் என்றும், தண்ணீர் சேமிக்கும் பாத்திரங்களை மூடி வைக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

நுண்ணுயிரியல் துறை மூன்றாமாண்டு மாணவி செல்வமாரி வரவேற்புரையும், ஸ்ரீ நாகலட்சுமி நன்றியுரையும் வழங்கினார்கள்.

இந்நிகழ்வை கே.ஆர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் அருணாச்சலம் வழிகாட்டுதலின் படி இளம்செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளர் மற்றும் தன்னார்வலர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.