கோவில்பட்டி கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரி நூலகம் மற்றும் NDLI கிளப் சார்பில் பயனர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது !
கோவில்பட்டி கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நூலகத்துறை மற்றும் தேசிய டிஜிட்டல் நூலகம் கிளப் சார்பில் முதலாம் ஆண்டு இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான ‘’பயனர் விழிப்புணர்வு நிகழ்ச்சி’’ நடைபெற்றுது.
இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர்.மதிவண்ணன் தலைமை வகித்தார், சிறப்பு விருந்தினர் சாயர்புரம் போப்ஸ் கல்லூரி நூலகர் முனைவர்.முத்தரசன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்துசிறப்புரையாற்றினார்.
மாணவர்கள் நூலக வளங்களை பயன்படுத்தும் முறைகள் டிஜிட்டல் நூலகத்தின் முக்கியத்துவம் மற்றும் அதன் மூலம் கிடைக்கும் மின்னனு வளங்களை பயன்படுத்தும் வழிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை எடுத்துத்துரைத்தார்.

மாணவர்கள் பாடபுத்தகளை தாண்டி பல்வேறு நூல்கள் ஆய்வு இதழ்கள் மின்னணு வளங்கள் மற்றும் நம்பகமான தகவல் ஆதாரங்களைப் பயன்படுத்தி தங்களின் அறிவையும் திறன்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் முதலாம் ஆண்டு அனைத்தும் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகத்தின் வழிகாட்டுத்தலின் படி முதல்வர்,பேராசிரியர்கள்,நூலகர் மற்றும் NDLI கிளப் உறுப்பினர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.












